ரொம்ப நாள் கழிச்சு இப்போ தன எழுதறேன் லீவ் விட்டாச்சு அனாலும் க பரீட்சை இருந்ததால் ரொம்ப நாள் கழிச்சி தன எழுதுறேன்.
நேத்து எல்லாம் ஒரு ப்ரோகிராம பார்த்தேன் சார், ஒரு பிரைவேட் சேனல்ல அது ஒரு பாட்டு போட்டி. தாடி வாய்த்த ஒரு பெரிய பாடகரும், முதல் படத்திலேயே பெரிய மியூசிக் டைரக்டர் அனைவரும், ஒரு பக்கத்துக்கு ஸ்டேட் காரரும் இருந்தனர்.
ஒரு நல்ல பட்டை என் வயதுள்ள ஒரு பையன் நன்றாகவே பாடினார். தலைவர் இளையராஜாவின் பாட்டு தான். பாடியவுடன் இந்த “ஜட்ஜ்”கள் சொன்ன
தீர்ப்பு தான் இன்னும் என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை அவர்கள் கூறிய தாவது : “உங்கள்ளுக்கு பாட தெரியுமா??” “உங்கள்ளுக்கு தமிழ் தெரியுமா?” “உங்கள பாட சொன்னா என்ன பண்ற??” போன்ற கேள்விகளை அள்ளி வீசினார்கள். பாவம் அந்த பையனால் “நாட்டமா தீர்ப்பை மாத்தி சொல்லு” என்ற பாநிலியோ அல்லது நீங்க எப்படி இப்படி சொல்லlலாம் என்று அவரால் கேட்க முடியவில்லை”
இதை அனுபவித்த அந்த பையனின் மனம் எவ்வளவு கஷ்ட்டப்படும் என்று நினைத்து பார்க்க வேண்டும் அவர்கள். இப்பொழுது எனக்கு இன்னொரு சந்தேஹம் எழுகிறது என்னவென்றால் அந்த பையனை முன்பே உள்ள தேர்வு சுற்றுகளைளியே அனுப்பி இருக்கலாமே? நமக்கு இதல்லாம் பார்க்க வேண்டும் என்று நம்மக்கேன் தலையெழுத்து?
விடையை நீங்களே கூறுங்கள்
